March 25, 2022
"அன்புள்ள குழந்தைகளே! உங்கள் அழுகையையும், அமைதிக்கான ஜெபங்களையும் நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். பல ஆண்டுகளாக சாத்தான் போர் நிகழ வேண்டுமென்று போராடி வருகிறான். அதனால்தான் உங்களை தூய வழியில் வழிநடத்த கடவுள் என்னை உங்களிடையே அனுப்பினார், ஏனென்றால், மனுக்குலம் குறுக்கு வழியில் சென்றுவிட்டது. கடவுளிடம் திரும்பி வந்து அவரது கட்டளைகளை கடைபிடிக்குமாறு உங்களை அழைக்கின்றேன். அதுவே இவ்வுலகில் உங்களுக்கு நன்மை பயக்கும். மேலும், உங்கள் மீது கொண்டுள்ள பேரன்பால் உங்களைக் காப்பாற்றி, புது வாழ்வுக்கு அழைத்துச்செல்ல விரும்பும் கடவுளுக்கு நீங்கள் செவிசாய்க்காததால் நீங்கள் நுழைந்துவிட்ட இந்த நெருக்கடியான சூழலில் இருந்து வெளிவர முடியும். எனது அழைப்புக்கு பதிலளித்ததற்கு நன்றி." மார்ச் 25, 2022