' Medjugorje - Messages From Our Lady 2008 - Tamil

Our Lady Of Medjugorje

Messages From 2008 In Tamil

அன்புக் குழந்தைகளே! தபசு காலத்தில் நீங்கள் கருணையின் காலத்தை நோக்கிச் செல்கின்றீர்கள். பன்படுத்தப்பட்ட நிலம்போல உங்கள் இதயங்கள் இருப்பதால் நன்மையின் கனிகளைப் பெற்றுக் கொள்ளத் தயாராக உள்ளன. சிறிய பிள்ளைகளே! நன்மை தீமைகளை தேரந்துகொள்ளும் சுதந்திரம் உங்களுக்கு உண்டு. எனவே ஜெபமும் தபமும் செய்யுங்கள் என்று உங்களை நான் அழைக்கின்றேன். சந்தோஷத்தின் கனிகளை உங்கள் இதயங்களிள் விதைப்பதால் உங்கள் இதயங்கள் நன்மையில் வளரும் உங்களைப் பார்ப்பவர்களும் உங்கள் வாழ்வின் மூலம் சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்ளுவார்கள். பாவத்தை விட்டொழித்து முடிவில்லா வாழ்வைத் தேர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களோடு இருக்கிறேன் என் மகனிடம் உங்களுக்காக பரிந்துபேசுகிறேன். எனது வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி.

25 ஜனவரி 2008


அன்புக் குழந்தைகளே! இந்த கருணையின் காலத்தில் ஜெபிப்பதையும் பாவத்தை விட்டொழிப்பதையும் மீண்டும் புதுப்பிக்க வேண்டுமென்று நான் உங்களை அழைக்கின்றேன். நாள் முழுதும் நீங்கள் அவ்வப்போது செய்யும் சிறு சிறு ஜெபங்களை கடவுளின் அன்பை இன்னும் அறியாதவர்களுக்காக ஒப்புக்கொடுங்கள். எனது வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி.

25 பிப்ரவரி 2008


அன்புக் குழந்தைகளே! நீங்கள் உங்களது தனிப்பட்ட மனமாற்றத்திற்காக ஆவனசெய்ய வெண்டுமென்று நான் உங்களை அழைக்கின்றேன். உங்களது இதயங்கள் கடவுளைவிட்டு வெகு தூரத்தில் உள்ளன. எனவே இன்னும் அதிகமான நேரத்தை ஜெபிப்பதிலும் பலிபீடத்தில் திவ்ய நற்கருணையாக வீற்றிருக்கும் இயேசுவை ஆராதிப்பதிலும் செலவிடுங்கள். இதனால் அவர் உங்களை மாற்றி வாழ்வின் நம்பிக்கைகையும் முடிவில்லா பேரின்ப வாழ்வு பெறவேண்டும் என்ற ஆசையையும் உங்கள் இதயங்களில் விதைத்திடுவார். சிறிய பிள்ளைகளே! கடவுளைத்தவிர மற்ற அனைத்தும் கடந்துபோய்க் கொண்டிருக்கின்றன. நான் உங்களோடு இருக்கின்றேன் அன்புடன் உங்களை உற்சாகப்படுத்துகிறேன். எனது வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி.

25 மார்ச் 2008


அன்புக் குழந்தைகளே! இளவேனிற்காலத்தில் சூரியக் கதிரகளின் இதமான வெயிலுக்காக ஏங்கும் மலரகளைப்போல நீங்களும் கடவுளின் அன்பிற்காக ஏங்கி அவரது அன்பில் வளரவேண்டுமென்று இன்றும் கூட நான் உங்களை அழைக்கின்றேன். இப்படியாக நீங்கள் கடவுளின் அன்பில் வளர்வதுடன் கடவுளை விட்டகன்று வெகு தூரத்திலிருக்கும் அனைவருக்கும் அவரது அன்பை எடுத்துச் செல்பவர்களாகவும் இருப்பீர்கள். கடவுளது சித்தத்தையே நாடுங்கள். உங்களது பாதையில் அவர் அறிமுகப்படுத்தும் அனைவருக்கும் நல்லது செய்து அவர்களுக்கு ஒளியாகவும் சந்தோஷத்தைக் கொடுப்பவர்களாகவும் இருங்கள். எனது வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி.

25 ஏப்ரல் 2008


அன்புக் குழந்தைகளே! கடவுள் என்னை உங்களோடு இருப்பதற்கு பணித்துள்ள இந்தக் கருணையின் காலத்தில். அன்புப் பிள்ளைகளே, நீங்கள் மனமாற்றம் பெறவேண்டுமென்று நான் அழைக்கின்றேன். விஷேசமாக, நான் உங்களோடு இருக்கும் இவ்வேளையில். உலக மீட்பிற்காக பாடுபடுங்கள் கடவுள் மிகவும் இரக்கமுள்ளவர். உங்களுக்கு சிறப்பான கொடைகளைக் கொடுக்கின்றார். எனவே. ஜெபத்தின் வழியாக அவற்றைத் தேடுங்கள். நான் உங்களோடு இருக்கின்றேன். மேலும், நான் உங்களை கைவிடமாட்டேன். எனது வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி.

25 மே 2008


அன்புக் குழந்தைகளே, நீங்கள் என்னைப் பின் தொடர்ந்து, எனது வார்த்தைகளின்படி நடக்கவேண்டுமென்று, என் உள்ளத்தில் எழும் பேரானந்தத்தோடு, இன்றும்கூட நான் உங்களை அழைக்கின்றேன். அமைதியில்லாத இவ்வுலகிற்கு அமைதியையும், அன்பையும் ஏந்திச் செல்லும் தூதுவர்களாக மகிழ்ச்சியோடு செயல்படுங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன். அமைதியின் அரசரான என் மகன் இயேசுவோடு இணைந்து உங்களை நான் ஆசீர்வதிக்கிறேன். எனது வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி.

25 ஜூன் 2008 (அன்னை காட்சியின் 27ஆம் ஆண்டு நிறைவு)


அன்புக் குழந்தைகளே! உங்கள் உடலுக்கு நல்ல ஓய்வு தேவை என்று நினைத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் உங்கள் உள்ளத்தின் மனமாற்றத்திற்காக நான் உங்களை அழைக்கின்றேன். ஜெபம் செய்துவிட்டு உங்கள் வேலையைத் துவங்குங்கள். அப்பொழுது உங்களைப் படைத்த கடவுளுக்காக உங்கள் இதயங்கள் ஏங்கும். உங்கள் ஆன்மாவிற்கும் உடலுக்கும் உண்மையான இளைப்பாற்றி அளிப்பது அவரே. அவர் தமது திருமுகத்தை உங்களுக்கு வெளிப்படுத்தி அவரது சமாதானத்தால் நிறப்புவாராக! நான் உங்களோடு இருப்பதுடன் உங்கள் ஒவ்வொருவருக்காகவும் கடவுள்முன் பரிந்துபேசுகிறேன். எனது வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி.

25 ஜுலை 2008


BackHomeOverviewInfo
Last Modified 07/28/2008